ஆற்றில் மணல் கடத்தல் டிராக்டர் டிரைவர் கைது
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், ஜெய்னுார் தென்பெண்ணை ஆற்றிலிருந்து நேற்று அதிகாலை டிராக்டர் ஒன்ற மணல் கடத்தி வந்தது. அப்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த நாகரசம்பட்டி போலீசார், அந்த டிராக்டரை நிறுத்தி விசாரித்தனர். அதில், மணலை கடத்தி வந்தது தெரிந்தது. டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், நெடுங்கல் பகுதியை சேர்ந்த டிரைவர் அரவிந்தன், 30, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.