உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, டிச. 12-கிருஷ்ணகிரி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மத்திய, மாநில அரசுகளின் வணிக விரோத சட்டங்களை கண்டித்து நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் சங்கர் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், வணிகர்களுக்கு சுமையாக கடைகளின் வாடகை மீதான, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். வணிகர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டிக் கொண்டிருக்கும் அந்திய நாட்டு ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு உடனே தடை செய்ய வேண்டும். மாநில அரசு ஆண்டுதோறும், 6 சதவீதம் சொத்துவரி விதிப்பை திரும்பப்பெற வேண்டும்.வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில்வரி விதிப்பை திரும்பப்பெற வேண்டும். குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், 400க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை