உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ஓசூர்: ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை, மேடு, பள்ளமாக காணப்படுவதால், அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகின்றன. அதனால், சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆங்காங்கு வித்தியாசமான வேகத்தடையை அமைத்து, அதற்கு மஞ்சள் நிற வர்ணம் பூசியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் திடீரென வேகத்தடையை பார்த்து வேகத்தை குறைப்பதால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பேரண்டப்பள்ளி அருகே மிகவும் இறக்கமான பகுதியில் கடந்த மாதம், 25 ல், 11 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.அதே இடத்தில் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு டாரஸ் லாரி உட்பட அடுத்தடுத்த வாகனங்கள் சென்றன. அப்போது, முன்னால் இருந்த வேகத்தடையால் டாரஸ் லாரி டிரைவர் பிரேக் பிடித்தார். அதனால் பின்னால் வந்த வாகனங்களை டிரைவர்கள் நிறுத்தினர். வேகமாக வந்த கன்டெய்னர் லாரி முன்னால் நின்ற வாகனத்தின் மீது மோதவே, ஒவ்வொரு வாகனங்களும் முன்னால் நின்ற மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பிக்கப் வாகனம், எர்டிகா கார், நான்கு மினி கன்டெய்னர் லாரிகள் என மொத்தம், 8 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதின. அதனால், 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 3 கி.மீ., துாரத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்தன. விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி ஹட்கோ போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை