உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிறப்பு பயிற்றுனர்களுக்கு பயிற்சி

சிறப்பு பயிற்றுனர்களுக்கு பயிற்சி

மாற்றுத்திறன் மாணவர்களுக்கானசிறப்பு பயிற்றுனர்களுக்கு பயிற்சி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களுக்கு, 3 நாள் பயிற்சி நடந்தது. பார்வையற்ற நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவன மண்டல மையம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டார வள மையத்தில், கடந்த 23, 24, 25 என மூன்று நாட்கள், சிறப்பு தேவையுடைய குழந்தைகளை ஆரம்ப காலத்தில் கண்டறிதல் மற்றும் பயிற்சி அளித்தல் குறித்து சிறப்பு பயிற்றுனர்களுக்கான பயிற்சி நடந்தது. மண்டல இயக்குனர் (பொ) ஸ்ரீபிரியா, காணொலி காட்சி மூலம் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். உதவி பேராசிரியர் ரேவதி, வட்டார வள மைய மேற்பாவையாளர் ஜெய்சங்கர், ஆசிரியர் பயிற்றுனர் பார்த்தீபன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஆரம்பகால கண்டறிதலின் முக்கியத்துவம், மேம்பாடு, 21 வகையான மாற்றுத்திறன் தன்மை, இந்திய மறுவாழ்வு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த, 18 தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டன. இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தென்காசி, பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களில் இருந்து, 50 சிறப்பு பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை