ஆபத்தை உணராமல் வாகனத்தில் பயணம்
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி, தாலுகாவின் தலைமையிடமாகவும், அதேபோல் மத்துார் ஊராட்சி ஒன்றிய தலைமையிடமாகவும் செயல்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் கிராமப்புறங்கள் மத்துார், போச்சம்பள்ளி உள்ளிட் மக்கள் சேரும் இடங்கள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை, துாய்மை பணியாளர்கள் தங்களின் பாதுகாப்பு நலனை கருதாமல், அர்ப்பணிப்பு பணியுடன் துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், ஒரு சில நேரங்களில் தங்களின் பாதுகாப்பு, ஆபத்தை உணராமல், குப்பையை அப்புறப்படுத்த அரசு வழங்கியுள்ள மின்சார பேட்டரி பொருத்திய வாகனங்களில், தொங்கிய நிலையில் பயணிக்கின்றனர். இது குறித்து அதிகாரிகள், அவர்களிடம் அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.