மேலும் செய்திகள்
பசுமையை ‘சிறை’ பிடிக்க 313 மரக்கன்றுகள் நடவு
23-Jul-2026
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் மாநகராட்சி, 41வது வார்டுக்கு உட்பட்ட ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பேஸ் -10ம் பகு-தியில் உள்ள, 100 அடி சாலையின் நடுவே, லுாமினஸ் என்ற தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து, மரக்கன்-றுகள் தொடர்ந்து நடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 12 லட்சம் ரூபாய் மதிப்பில், 100 அடி சாலையின் நடுவே நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், அப்பகுதி வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் குபேரன் சங்கர் ஆகியோர் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். கால்நடைகளால் மரக்கன்றுகள் சேதமாகாமல் இருக்க, சுற்றிலும் இரும்பு வேலி அமைக்கப்பட்டது. லுாமினஸ் நிறுவன துணைத்த-லைவர் பிள்ளை உட்பட பலர் பங்கேற்றனர்.
23-Jul-2026