உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

கிருஷ்ணகிரி, கம்மம்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில், பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவ, மாணவியருக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டன.கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் விழா, பத்தாம் வகுப்பில் சாதித்த மாணவர்கள், ஆசிரியர்களை பாராட்டும் விழா, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்த, 29 மாணவ, மாணவியருக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், 1,000 ரூபாய் பரிசுகளை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.தொடர்ந்து, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதின் மூலம் பள்ளி தலைமையாசிரியர் பெற்ற, 10 லட்சம் ரூபாய் நிதியிலிருந்து மாணவர்களுக்கு, 70 செட் பென்ஞ், டெஸ்குகள் பயன்பாட்டிற்கு வழங்குவதை கலெக்டர் தொடங்கி வைத்தார்.மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கல்வி) சர்தார், பள்ளி தலைமையாசிரியர் திருவரசு, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை