மேலும் செய்திகள்
டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
27-Jun-2026
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர், 15 வயது சிறுவன், தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கிறார். இவரும், அவரது நண்பரும் கடந்த, 12ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள மசூதி அருகே, டி.வி.எஸ்., மொபட்டில் சென்றனர். அப்போது அவர்களை, ஓசூர் நீலமேக நகர் மற்றும் ராயக்கோட்டை ஹட்கோ பகுதியை சேர்ந்த, 18 வயது மதிக்கத்தக்க இரு வாலிபர்கள் நிறுத்தினர். ஆனால், மாணவன் மொபட்டை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இருவரும், மாணவனை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி கல்லால் தாக்கினர்.இதில் தலையில் காயமடைந்த மாணவன், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகார்படி, வாலிபர்கள் இருவரையும் ஓசூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதில், நீலமேகம் நகரை சேர்ந்த வாலிபர், தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., இரண்டாமாண்டு படிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
27-Jun-2026