வெடி பொருட்கள் பதுக்கிய இருவர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பாலகுறி அருகே 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவன பஸ்சை, நாட்டு வெடிகுண்டு வீசி சிலர் தாக்கினர். இதில், பஸ் சேதமானது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி போலீசார், பாலகுறியை சேர்ந்த சக்திவேல், 28, தனுஷ், 25, சேகர், 21, ஆகிய மூவரை நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர். அதில், சேகருக்கு நாட்டு வெடிகுண்டுகளை வழங்கிய கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண் தர்ஜூன் நிஷா, 39, என்பவரை, போலீசார் கைது செய்தனர். மேலும் கிருஷ்ணகிரியில், வெடி மருந்து பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என நடத்திய சோதனையில், புதுப்பேட்டை பர்கத்துல்லா, 55, என்பவரை போலீசார் கைது செய்து, 125 கிலோ வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.