மேலும் செய்திகள்
விவசாயியை தாக்கியவர் கைது
27-Sep-2025
கிருஷ்ணகிரி, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தர், 35. கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் அருகே செந்தாரப்பள்ளியில் உள்ள கிராமத்தில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த, 30ம் தேதி மாலை, 6:45 மணிக்கு நிறுவனத்தில் இருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டனர்.ஆனால் சந்தர், பணம் கொடுக்க மறுக்கவே, அவருடன் வாக்குவாதம் செய்த மர்ம நபர்கள், கத்தியால் சந்தரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில், தலை, இடது கையில் காயமடைந்த சந்தர், பர்கூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கந்திகுப்பம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
27-Sep-2025