கம்ப்ரசர் ஆப்பரேட்டர் கொலையில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது
கம்ப்ரசர் ஆப்பரேட்டர் கொலையில்இருவர் குண்டர் சட்டத்தில் கைது ஓசூர், டிச. 8-ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் குப்புசாமி, 26. கம்ப்ரசர் ஆப்பரேட்டர்; இவரும், தேர்ப்பேட்டை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பழ வியாபாரி சேகர், 28, மற்றும் பார்வதி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி இம்ரான்கான், 27, ஆகியோரும் நண்பர்கள்; ஓசூர் டவுன் ஸ்டேஷன் எதிரே உள்ள தேர்ப்பேட்டை ஏரி அருகே, 3 பேரும் கடந்த அக்., 22 இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அந்த முன்விரோதத்தில் அன்றிரவு காளேகுண்டா பகுதியில் வைத்து, இம்ரான்கான், சேகர் ஆகியோர், குப்புசாமியை கத்தியால் குத்திக்கொன்றனர். ஓசூர் டவுன் போலீசார் இருவரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பரிந்துரை செய்தார். அதையேற்று மாவட்ட கலெக்டர் சரயு நேற்று உத்தரவிட்டார். அந்த உத்தரவின் நகலை, இன்ஸ்பெக்டர் நாகராஜ் நேற்று, சேலம் மத்திய சிறையிலுள்ள அவர்களிடம் வழங்கினார்.