மாணவன் உட்பட இருவர் மாயம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகாவை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. கடந்த, 7 ம் தேதி காலை, 8:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி திரும்பி வரவில்லை.அவரது தாய் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் பகுதியை சேர்ந்த பிரசன்னா என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஓசூரில் உள்ள தனியார் நிறுவன குடியிருப்பில் வசிப்பவர், 17 வயது சிறுவன்; பிளஸ் 2 முடித்துள்ளார். கடந்த, 9 ம் தேதி காலை, 9:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை சிப்காட் போலீசில் கொடுத்த புகார்படி, போலீசார் தேடி வருகின்றனர்.