உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண் உட்பட இருவர் மாயம்

பெண் உட்பட இருவர் மாயம்

கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்தவர் அருணா, 20. இவர் தன், கணவர் சுந்தரேசனுடன் கோபித்து கொண்டு, தன் தாய் வீடான மாதேபட்டிக்கு வந்துள்ளார். கடந்த, 20ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். இது குறித்து, உறவினர் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். காவேரிப்பட்டணம் அருகிலுள்ள பகுதியை சேர்ந்தவர், 17 வயது சிறுவன். இவர், கலெக்டர் அலுவலகம் எதிரிலுள்ள மாவட்ட இசை பள்ளியில் பயின்று, பாதியில் படிப்பை விட்டுள்ளார். கடந்த, 19ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். சிறுவனின் பெற்றோர் அளித்த புகார் படி காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை