மேலும் செய்திகள்
2 மாணவி உட்பட 4 பேர் மாயம்
18-Apr-2025
மாணவி உட்பட இருவர் மாயம்
10-Apr-2025
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் திரிஷா, 21. எலத்தகிரியிலுள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 20ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். மாணவியின் பெற்றோர் கே.ஆர்.பி., டேம் போலீசில் புகார் அளித்தனர். அதில். வெங்கிலிகனப்பள்ளியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அன்பரசு, 22, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர். ஊத்தங்கரை அடுத்த கல்லாவியை சேர்ந்தவர் ஜனனி, 19. ஊத்தங்கரையிலுள்ள தனியார் கல்லுாரியில், பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 21ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் அளித்தனர். அதில், சாமல்பட்டியை சேர்ந்த ஐ.டி., நிறுவன ஊழியர் ராஜேஷ், 23, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.மயான பாதை ஆக்கிரமிப்பை
18-Apr-2025
10-Apr-2025