மேலும் செய்திகள்
2 மாணவி உட்பட 4 பேர் மாயம்
18-Apr-2025
கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி அடுத்த பையனப்பள்ளியை சேர்ந்தவர் கனிமொழி, 21. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதில், கிருஷ்ணகிரி அடுத்த கரடிகுரியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கோகுல கிருஷ்ணன், 25, மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர். சிங்காரப்பேட்டை அடுத்த குறுகப்பட்டியைச் சேர்ந்தவர், 17 வயது, பிளஸ் 2 மாணவி. இவர், கடந்த 5ல், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் காணவில்லை. இதுகுறித்து மாணவியன் பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதில், சிங்காரப்பேட்டை சேர்ந்த வாலிபர் தீனா, 20, மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Apr-2025