மேலும் செய்திகள்
எறும்புத்தின்னி விற்க முயன்ற 5 பேர் கைது
25-Nov-2024
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில், வனச்சரகர் முனியப்பன் தலைமையிலான வனத்துறையினர், நேற்று வாகன தணிக்கை நடத்தினர். அப்போது, டூ வீலரில் வந்த இருவரிடம் சோதனையிட்டதில், அவர்களிடம், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.8 கிலோ திமிங்கலத்தின் எச்சம் இருந்து தெரிந்தது. விசாரணையில், அவர்கள் அவதானப்பட்டி கரண்குமார், 24, பழையபேட்டை முகமதுபகாத், 23 என, தெரிந்தது. வனத்துறையினர், இருவரையும் கைது செய்து திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'திமிங்கலத்தின் வயிற்றில் இயற்கையாகவே, 'அம்பர்கிரிஸ்' எனும் திரவம் சுரக்கிறது. திமிங்கலம், தன் வாயில் இருந்து அதை எச்சமாக கக்கும். இதை நெருப்பில் சூடுபடுத்தினால், வாசனை வெளிவரும். இதை வாசனை பொருட்கள், மருந்துகள் தயாரிப்பிற்கு கள்ளத்தனமாக எடுத்து சிலர் விற்கின்றனர்' என்றனர்.அதேபோல, யானை தந்தத்தில் விநாயகர் சிலை செய்து விற்பனை நடப்பதாக, சென்னை மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. அதன்படி, ஊத்தங்கரை, அண்ணாநகர், 2வது தெருவில் வசிக்கும் ரஞ்சித், 41, வீட்டில், வனத்துறையினர் சோதனை நடத்தினர். அதில், யானை தந்தத்தில் செய்த விநாயகர் சிலையை கண்டறிந்து பறிமுதல் செய்து, ரஞ்சித்தை கைது செய்தனர்.
25-Nov-2024