உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவில்களை குறி வைத்து திருடும் கும்பல் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்

கோவில்களை குறி வைத்து திருடும் கும்பல் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உலகம் கிராமத்தில் உள்ள பாரத கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல், உண்டியலை உடைத்து காணிக்கையை திருடி சென்றது. அதேபோல், கூலியம் கிராமத்தில் மூன்று அம்மன் கோவில்களின் உண்டியல்களை உடைத்து, காணிக்கை திருடப்பட்டுள்ளது. இச்சம்பங்கள் குறித்து, சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர். ஓசூரில் உள்ள ராயக்கோட்டை சாலையில், காரப்பள்ளி அருகே உள்ள செந்தில் நகரில், சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள அம்மன் சன்னதியில் இருந்த உண்டியலை கடந்த வாரம் உடைத்த மர்ம கும்பல், காணிக்கையை திருடியது.இதற்கிடையே நேற்று முன்தினம் சித்தி விநாயகர் கோவிலுக்குள் புகுந்த கும்பல், உண்டியலை உடைத்து காணிக்கையை திருடி சென்றுள்ளது. இக்காட்சிகள் கோவிலில் இருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். இப்படி கோவில்களை குறி வைத்து மர்ம கும்பல் திருடும் சம்பவம் அதிகரித்துள்ளது. இது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ