உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு நடுநிலை பள்ளியில் வானவில் மன்றம் துவக்கம்

அரசு நடுநிலை பள்ளியில் வானவில் மன்றம் துவக்கம்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 'வானவில் மன்றம்' துவக்க விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பொன்நாகேஷ் தலைமை வகித்தார். வானவில் மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், மன்றத்தை துவக்கி வைத்தார். 6ம் வகுப்பு மாணவ, மாணவியர், 116 பேர், அவருடன் கலந்துரையாடினர். அப்போது, மாணவர்கள் தர்ஷன், கும்கும்பரத், அஸ்வின், வித்யாஸ்ரீ ஆகியோர், அறிவியல், கணிதம் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இப்பள்ளியில், 6 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 'வானவில் மன்றம்' மூலம், அறிவியல் மற்றும் கணித பாடங்களில் உள்ள செயல்முறைகள் எளிமையாக கற்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி ஆசிரியர்கள் சரவணன், ஷியாமளா, சசிகலா உட்பட பலர் பங்கேற்றனர். ஓசூர் ஒன்றியத்தில், செயல்முறை கற்றல் கற்பிப்பதற்காக, 3 வானவில் மன்ற கருத்தாளர்களான நித்ய கல்யாணி, பிரபா, திவ்யா ஆகியோர் நியமிக்கப்பட்டு, மாதம் ஒருமுறை, 8,000 மாணவ, மாணவியருக்கு அறிவியல் மற்றும் கணித உபகரணங்களுடன் செயல்முறை கற்றல் குறித்து கற்பித்து வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை