உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேங்காய் உடைத்து வி.சி.க., போராட்டம்

தேங்காய் உடைத்து வி.சி.க., போராட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்டில், விடுதலை சிறுத்-தைகள் கட்சி சார்பில், அம்பேத்கர் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாநகர மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை துவங்க, மத்திய அரசு வேகம் காட்ட வேண்டும். மெட்ரோ ரயில் சேவை கொண்டு வர வேண்டும்.மாணவர்களுக்கான கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, வி.சி., கட்சியின் கிருஷ்ணகிரி பார்லிமென்ட் தொகுதி செயலாளர் செந்தமிழ் மற்றும் கட்சி-யினர், ஓசூர் பஸ் ஸ்டாண்டில், தேங்காய்களை உடைத்து போராட்டம் நடத்தினர். ஓசூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாவட்ட தொண்ட-ரணி அமைப்பாளர் வினோத்குமார், நகர அமைப்-பாளர் சூர்யவளவன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ