மேலும் செய்திகள்
போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் தேங்கும் மழை நீர்
22-Sep-2025
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், ஆவத்துவாடி பஞ்.,க்கு உட்பட்ட, ஏ.மோட்டூர் கிராமத்தில், 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 4 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏ.மோட்டூர் கிராமத்தில், தெருக்களில் ஆங்காங்கே கழிவுநீருடன் கலந்து, மழைநீர் தேங்கி வருகிறது. இதனால் மக்கள் அவசர தேவைகளுக்கு வெளியில் செல்லும்போது, கழிவுநீர் கலந்து தேங்கியுள்ள மழைநீரில் நடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீருடன் கலந்த மழைநீரை அகற்ற, நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22-Sep-2025