மேலும் செய்திகள்
ஓசூரில் ரசாயன நுரையால் மூழ்கும் தரைப்பாலம்
07-Nov-2024
ஓசூர் : ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்த நிலையில், தென்பெண்ணையாற்றில், 2வது நாளாக ரசாயன நுரை பெருக்கெடுத்து ஓடியது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 600 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று காலை நீர்வரத்து அதிக-ரித்து, 680 கன அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயர-மான, 44.28 அடியில், 41.16 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையின் மணல் போக்கி மதகு வழியாக, 600 கன அடி, 3ம் எண் ஷட்டர் வழியாக, 80 கன அடி என மொத்தம், 680 கன அடி நீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது. கர்நாடகாவிலிருந்து வந்த உபரி நீரில் அதிகளவு சுத்திகரிக்கப்ப-டாத தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் கலந்திருந்-ததால், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை-யாற்றில் திறக்கப்பட்ட நீரில் நேற்று, 2வது நாளாக ரசாயன நுரை ஏற்பட்டு, கடும் துர்நாற்றத்துடன் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி-யது. காற்றில் பறந்த ரசாயன நுரை, ஆற்றின் கரையோர விவசாய நிலங்களில் படர்ந்தது.அணையின் இடதுபுற கால்வாயிலும் அதிகளவில் ரசாயன நுரை தேங்கி நின்றது. இது பாசன விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
07-Nov-2024