உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் பெய்து வரும் பரவலான மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கே.ஆர்.பி., அணைக்கு, 705 கன அடியாக இருந்த நீர்வரத்து, தொடர் மழையால் நேற்று, 928 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து பாசன கால்வாயில், 179 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 414 கன அடி என மொத்தம், 593 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 48.35 அடியாக நீர்மட்டம் இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி பாரூரில், 46.4 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், பெனுகொண்டாபுரம், 45.20, போச்சம்பள்ளி, 44, நெடுங்கல், 30.40, பாம்பாறு அணை, 30, கெலவரப்பள்ளி, 15, கே.ஆர்.பி., 14.60, சின்னாறு அணை, ஓசூர், தேன்கனிக்கோட்டை தலா, 10, ராயக்கோட்டை, சூளகிரி தலா, 7, அஞ்செட்டி, 4.80, தளி, 3.50 என மொத்தம், 320.30 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. நேற்றும் கிருஷ்ணகிரியில் பரவலாக மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி