10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.63 லட்சம் நலத்திட்ட உதவி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 344 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா, 6,359 ரூபாய் வீதம், 50,872 ரூபாய் மதிப்புள்ள தையல் இயந்திரங்கள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு, 2.13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்கலன் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் என மொத்தம், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு, 2.63 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் தனஞ்செயன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.