மேலும் செய்திகள்
நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம்
11-Jun-2025
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த ரெட்டிப்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, 282 பயனாளிகளுக்கு, 2.27 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து, ஊத்தங்கரை வட்டாரத்தில் செயல்பட்டு வரும் பாலின வள மையம், வானவில் மையத்தை பார்வையிட்டு, அதில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், நடவடிக்கை எடுக்கப்பட்ட வழக்கு விபரங்களை கேட்டறிந்தார். கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் தனஞ்செயன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் இந்திரா, வேளாண் துறை இணை இயக்குனர் காளியப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
11-Jun-2025