உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1.07 கோடிக்கு நலத்திட்ட உதவி

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.1.07 கோடிக்கு நலத்திட்ட உதவி

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, பாலஜங்கமன-ஹள்ளி பஞ்., உட்பட்ட இருசன் கொட்டாய் பகுதியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில், வருவாய், ஆதி-திராவிடர் நலத்துறை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திற-னாளிகள் நலத்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், மொத்தம், 203 பயனாளிகளுக்கு, 1.07 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.இதில், தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் (பொ) இளவரசன், மாற்றுத்திறனா-ளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாவட்ட சமூக நல அலு-வலர் பவித்ரா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.முகாமில், பெண் ஒருவர் மாற்று திறனாளிக்கான எந்தவொரு நலத்திட்ட உதவியும் வழங்கவில்லை என மனு அளித்தார். மனு குறித்து ஆய்வு செய்த கலெக்டர் சாந்தி, 100 சதவீதம் மாற்றுதிற-னாளியான நபருக்கு, ஏன் இதுவரை நலத்திட்ட உதவி வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்-குமார், பாலஜங்கமனஹள்ளி வி.ஏ.ஓ., கணேசன் ஆகியோருக்கு, டோஸ் விட்டார். ஒரு சிறிய கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனா-ளிகள் நிலையை கூட அறிந்து கொள்ள முடியாமல், 2 வருடமாக வி.ஏ.ஓ., என்ன செய்கிறார் என கடிந்து கொண்டார். மேலும், மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !