உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிணற்றில் அழுகிய பெண் சடலம் மீட்பு

கிணற்றில் அழுகிய பெண் சடலம் மீட்பு

  1. போச்சம்பள்ளி, திருப்பத்துார் மாவட்டம், திருப்பத்துார், ஆறுமுக நைனார் தெருவை சேர்ந்தவர் லட்சுமி, 49. இவரின் கணவர் வேலு, 55. இவர்கள் கடந்த ஒரு வருடமாக, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்துாரில், வாடகை வீடு எடுத்து, இறைச்சி கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த, 10ல் வீட்டை விட்டு சென்ற லட்சுமி, திரும்பவும் வீட்டிற்கு வராத நிலையில், கணவர் வேலு மற்றும் மகன்கள், மகள்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.
  2. நேற்று காலை சந்துார் பாபுபிரசாத் என்பவரின் விவசாய கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் உதவியுடன், போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், அது மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போன லட்சுமி என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி