உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கனவு இல்லத்திற்கு ரூ.30,000 லஞ்சம் பி.டி.ஓ., ஆபீசில் பெண்கள் முற்றுகை

கனவு இல்லத்திற்கு ரூ.30,000 லஞ்சம் பி.டி.ஓ., ஆபீசில் பெண்கள் முற்றுகை

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தில், 'கனவு இல்லம்' வழங்க லஞ்சம் கேட்பதாக கூறி, 100க்கும் மேற்பட்ட பெண்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறுகையில், 'தளி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளில், கலைஞர் கனவு இல்லம் கட்ட, 30,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அனுமதி கொடுக்கின்றனர். மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு, 330 ரூபாய் ஊதியத்திற்கு பதிலாக, 150 -- 210 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர். ரேஷன் கடைகளில், குடும்ப தலைவருடன் பெண்களும் வர வேண்டும் என்கின்றனர். இதனால் வேலைக்கு செல்வோர் அவதிப்படுகின்றனர். இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.தொடர்ந்து, கெலமங்கலம் பி.டி.ஓ., அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு, கலெக்டர் நேரில் விசாரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம், அலுவலர்கள், கெலமங்கலம் போலீசார் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி