உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கலவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

கலவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

உத்தனப்பள்ளி, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மாசி மாரண்டி, 19. கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த பி.மாரண்டப்பள்ளி கிராமத்தில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 10ம் தேதி மாலை, 5:45 மணிக்கு, ஹாலோ பிரிக் கலவை இயந்திரத்தை சுத்தம் செய்தார். இதை அறியாத அந்நிறுவனத்தில் இயந்திர ஆப்பரேட்டராக பணியாற்றும், கர்நாடகா மாநிலம், ஆனைக்கல்லை சேர்ந்த வெங்கடேசன், 25, என்பவர், கலவை இயந்திரத்தை இயக்கினார்.அதனால், அதற்குள் சிக்கி மாசி மாரண்டி படுகாயமடைந்தார். அவரை மீட்டு, ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். உத்தனப்பள்ளி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து, இயந்திரத்தை இயக்கிய வெங்கடேசனை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை