மேலும் செய்திகள்
பொட்டிரெட்டிப்பட்டியில் 20 நாட்டுக்கோழி திருட்டு
23-Aug-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த குட்டூரை சேர்ந்தவர் நாகராஜன், 66, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 4ல், புல்லட்டில் சென்றுள்ளார். மாலை, 6:30 மணியளவில் குட்டூர் அருகே கண்ணன்டஹள்ளி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த புல்லட், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, சாலையோரம் நடந்து சென்ற சத்தியவாணி, 40, என்பவர் மீதும் புல்லட் மோதியதில் படுகாயம் அடைந்தார். பைக் கவிழ்ந்து படுகாயங்களுடன், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகராஜன் நேற்று முன்தினம் இறந்தார்.விபத்து குறித்து மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Aug-2025