மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்......
15-Apr-2025
பனமரத்துப்பட்டி:மல்லுார் அருகே வாழக்குட்டப்பட்டியை சேர்ந்தவர் சேகர். அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரவி, 52. இரு குடும்பத்தினருக்கும் தட பிரச்னையில் முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம், சேகர் மனைவி லட்சுமியை, 'இந்த தடத்தில் வரக்கூடாது' என, ரவி தடுத்து தள்ளிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்தார். அவர் கத்தியுடன் தகராறு செய்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. இதையடுத்து லட்சுமி புகார்படி, மல்லுார் போலீசார், ரவி உள்பட சிலர் மீது வழக்குப்பதிந்தனர். நேற்று ரவியை கைது செய்தனர். லட்சுமி மகன் முரளி கிருஷ்ணன், சேலம், செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார்.
15-Apr-2025