தொழிலாளி பைக் தீ வைத்து எரிப்பு
அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன், 45, கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 26 அதிகாலை, 5:00 மணிக்கு அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் பின்புறம், தனது ஹீரோ சூப்பர் ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்தியிருந்தார். இதை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், தீ வைத்து முழுமையாக எரித்தனர். இது தொடர்பாக, நேற்று முன்தினம் அஞ்செட்டி போலீசில் லட்சுமணன் புகார் செய்தார். முன்விரோதம் காரணமாக பைக்கை தீ வைத்து எரித்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.