மேலும் செய்திகள்
தீபாவளிக்கு பின் வடமாநிலத்தவர் வருகை அதிகரிப்பு
24-Nov-2024
கிருஷ்ணகிரி, டிச. 20-ஓசூர் அருகே, நேற்று முன்தினம் மாலை வடமாநில பெண் தொழிலாளர்கள் இருவர் கார் மோதி பலியாகினர். உரிய நடவடிக்கை கோரி, நேற்று அப்பகுதியில் தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பி.செட்டிப்பள்ளி அருகே தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், 5 பேர், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து, தாங்கள் தங்கியுள்ள பகுதிக்கு சென்றபோது, அவ்வழியாக வந்த கார் மோதியதில் ஜெயஸ்ரீ யாதவ், 23, சந்தா பர்மடே, 21 ஆகிய, 2 வடமாநில பெண் தொழிலாளர்கள் பலியாகினர்.அந்த தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும், வடமாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்கள், 300க்கும் மேற்பட்டோர் நேற்று பணியை புறக்கணித்து தொழிற்சாலை முன், காலை, 8:30 மணியளவில், தேன்கனிக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை, மின் விளக்குகள், 'சிசிடிவி' அமைக்க வேண்டும். தனியார் பஸ்களில் அதிக நபர்களை ஏற்றி செல்லக்கூடாது என கோஷமிட்டனர்.ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியதம்பி மற்றும் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து காலை, 11:00 மணியளவில் அவர்கள் கலைந்து சென்றனர். காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஆந்திர மாநிலம், கடப்பாவை சேர்ந்த சீனிவாஸ், 32 என்பவரை கெலமங்கலம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
24-Nov-2024