மேலும் செய்திகள்
குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
15-Nov-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்டாண்மை கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளியில்,தேசிய பசுமை படை சார்பில் உலக மாசு கட்டுப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை வகித்தார். இதில், பிளாஸ்டிக் தவிர்ப்பு, மஞ்சப்பையின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டு, பள்ளி வளாகத்திற்குள், 300 செடிகளை கொண்டு உயிர்வேலிகள் அமைக்கப்பட்டன. பள்ளி, ஆசிரியர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
15-Nov-2025