மேலும் செய்திகள்
கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்த பரணி தீபம்
13-Dec-2024
கிருஷ்ணகிரி: கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, கிருஷ்ணகிரி பழைய-பேட்டை கிரிஜாம்பாள் உடனுறை கவீஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜையுடன் கொடிகம்பத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.ஏராளமான பக்தர்கள் தீபத்தை வழிபட்டு, கொடிக்கம்பத்தை சுற்றி வந்தனர். இதே போல், பழையபேட்டை சோமேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றி, உற்சவரை கோவிலை சுற்றி ஊர்வ-லமாக எடுத்துச் சென்றனர். புதுப்பேட்டை ராசுவீதி பிரசன்ன பார்-வதி சமேத சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள், அகலில் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மலை, பெரிய ஏரி மேற்கு கோடிக்கரையில் அமைந்துள்ள, 814 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலபைரவர் கோவில் என மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில், பரணி தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன.மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றி, கோவிலுக்கு சென்று வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
13-Dec-2024