உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக்குகள் திருடிய வாலிபர் கைது

பைக்குகள் திருடிய வாலிபர் கைது

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் தயாளன், 32, கூலித்தொழிலாளி; இவர் கடந்த மாதம், 29ம் தேதி இரவு, 11:00 மணிக்கு தனது வீட்டின் பஜாஜ் பல்சர் பைக்கை நிறுத்தியிருந்தார். அதை மர்ம நபர் திருடி சென்றார். ஓசூர் சீனிவாசா தியேட்டர் அருகே வசிப்பவர் விஜய் பாலாஜி, 35. ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் வாட்டர் கம்பெனி எதிரே கடந்த, 7ம் தேதி இரவு தனது ஹோண்டா ஆக்சஸ் ஸ்கூட்டரை நிறுத்தியிருந்தார். இதை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இந்த இரு சம்பவம் தொடர்பாக, ஓசூர் டவுன் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த விஜய், 24, என்பவர் பைக்குகளை திருடியது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், இரு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி