உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அங்கிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் வள்ளி, 62. கடந்த 20ல், பர்கூர் அருகே சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் பைக்கில் வந்த இருவர், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த, ஒன்றரை பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். வள்ளி புகார் படி, பர்கூர் போலீசார் விசாரித்தனர். 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில், பைக்கில் வந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட சென்னை, மேடவாக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார், 20, என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை