உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பஸ் டிரைவருடன் தகராறில் வாலிபர் கைது

பஸ் டிரைவருடன் தகராறில் வாலிபர் கைது

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலப்பட்டி அருகே வெலகலஹள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ், 45. அரசு பஸ் டிரைவர்; இவர் நேற்று காலை, 7:30 மணிக்கு, தேன்கனிக்கோட்டையிலிருந்து ஓசூருக்கு, 18ம் நம்பர் அரசு டவுன் பஸ்சை ஓட்டி வந்தார். ஓசூர் பஸ் ஸ்டாண்டில் பஸ்சை நிறுத்தி விட்டு, மற்றொரு பஸ் கண்டக்டரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த ஜெயசூர்யா, 21, என்பவர், ஹார்ன் அடித்து வழிவிடுமாறு பிரகாஷிடம் கேட்க, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த ஜெயசூர்யா மற்றும் அவரது தரப்பினர், தன்னை தாக்கியதாக ஓசூர் டவுன் போலீசில் பிரகாஷ் புகார் செய்தார். அதன் பேரில், ஜெயசூர்யா, அவரது அண்ணன் மாதவன், 23, உட்பட, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, ஜெயசூர்யாவை கைது செய்தனர். அதேபோல், டிரைவர் பிரகாஷ் தன்னை தாக்கியதாக மாதவன் கொடுத்த புகார்படி, பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை