நெய் வியாபாரி கொலையில் நீதிமன்றத்தில் வாலிபர் சரண்
நெய் வியாபாரி கொலையில்நீதிமன்றத்தில் வாலிபர் சரண்ஓசூர், நவ. 26-சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வேலாங்குளத்தை சேர்ந்தவர் அழகுராஜா, 31. நெய் வியாபாரி. கர்நாடகா மாநில எல்லையில் நெய் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த, 21 காலை, ஓசூர் ரிங்ரோட்டில் ஓரத்தில், கர்நாடகா மாநில டாஸ்மாக்கை ஒட்டிய பள்ளூரில், 37 வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி ஸ்டேஷன் போலீசார் விசாரித்தனர்.இதில், சென்னை அருகே தாம்பரம் பகுதியில் அழகுராஜாவை கொலை செய்து, அவரது சடலம் மற்றும் மொபட்டை, சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்து, கர்நாடக மாநில எல்லையில் வீசியது தெரிய வந்தது. கொலையாளிகளை போலீசார் தேடிவந்த நிலையில், அழகுராஜா வீட்டின் அருகே வசிக்கும் குமரேசன், 35, என்பவர், கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கஸ்டடிக்கு பின் தான், கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. முன்விரோதத்தில், தன்னை தீர்த்து கட்டி விடுவார் என பயந்து, அழகுராஜாவை, குமரேசன் கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அது உண்மையா என்ற கோணத்திலும், இக்கொலையில் தொடர்புடைய மேலும் சிலரையும், அத்திப்பள்ளி போலீசார் தேடி வருகின்றனர்