உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிலமோசடி புகார்களை விசாரிக்க : இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

நிலமோசடி புகார்களை விசாரிக்க : இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

மதுரை : மதுரை நகரில் நிலமோசடி புகார்களை விசாரிக்க இரண்டு இன்ஸ்பெக்டர்களை நியமித்து கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். நேற்று முன் தினம் வரை நிலமோசடி, இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக மாநகராட்சி தி.மு.க., கிழக்கு மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி, ஆர்.எல்.ராஜ் உட்பட தி.மு.க., பிரமுகர்கள் மீது மத்திய குற்றப்பிரிவில் 13 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை வரை எந்த புகாருக்கும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. நிலமோசடி குறித்து விசாரிக்க, இதுவரை இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் மட்டுமே இருந்தார். இதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதைதொடர்ந்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தல்லாகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஞானசேகரனை மத்திய குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்து கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை