உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சி.ஓ.பி.டி., நோய்க்கு இலவச பரிசோதனை

சி.ஓ.பி.டி., நோய்க்கு இலவச பரிசோதனை

மதுரை : மதுரையில் சிப்லா நிறுவனம், மதுரை ஷெனாய்நகர் ஸ்ரீசெஸ்ட் அன்ட் இ.என்.டி., மையம் சார்பில் சி.ஓ.பி.டி., நுரையீரல் நோய் குறித்த விழிப்புணர்வுக்காக இலவச பரிசோதனை மையம் ஜூலை 18 முதல் 24ம் தேதி வரை செயல்பட உள்ளது.முதல்நாள் ஷெனாய்நகர் இளங்கோ பள்ளி எதிரே மையம் செயல்படும். பின் பெரியார் பஸ்ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலக பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் இயங்கும்.

புகை பிடிப்பவர், 45 வயதுக்கு மேற்பட்டோர், மாசு உள்ள இடத்தில் பணியாற்றுவோர், ரப்பர், ரசாயனம், பருத்தி ஆலைகளில் வேலை செய்வோர், மூச்சுத் திணறல் உள்ளவர், விறகு அடுப்பை பயன்படுத்துவோர் இதில் பங்கேற்கலாம். பரிசோதனை மூலம் சி.ஓ.பி.டி., நோய் தாக்கத்தை குறைக்கலாம், என நுரையீரல் நோய் நிபுணர் டாக்டர் பழனியப்பன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை