உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எவர்சில்வர் பாத்திரம் தயாரிப்பு தொழில் பளபளக்கவில்லையே: மாற்றுத் தொழில் தேடும் தொழிலாளர்கள்

எவர்சில்வர் பாத்திரம் தயாரிப்பு தொழில் பளபளக்கவில்லையே: மாற்றுத் தொழில் தேடும் தொழிலாளர்கள்

ஒத்தக்கடை பகுதியில் எவர்சில்வர் பட்டறை தொழிலில் 200க்கும் மேற்பட்டோர் 2 தலைமுறைகளாக ஈடுபட்டு வந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பணியாற்றினர். இங்கு தயாரித்த சில்வர் பாத்திரங்கள் தென்மாநில அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.பல்வேறு காரணங்களால் தற்போது உற்பத்தியாளர்கள் குறைந்து விட்டனர். 50 பட்டறைகள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன. அதன் விளைவாக இத்தொழிலை நம்பியிருந்த பல ஆயிரம் தொழிலாளர்களும் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர்.யானை மலையான் எவர்சில்வர் மறுஉற்பத்தியாளர் நலச்சங்க செயலாளர் சத்திய நாராயணன் கூறியதாவது:கொரோனா காலத்துக்குபின் உற்பத்தியாளர்கள் பாதியாக குறைந்து விட்டனர். தற்போது ஒத்தக்கடை பகுதியில் இத்தொழிலில் 30க்கும் குறைவான உற்பத்தியாளர்கள் உள்ளன. தொழிலாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.மூலப்பொருட்களை எங்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,யுடன் வழங்குகின்றனர். எங்களிடம் இருந்து வியாபாரிகள் உற்பத்தி பொருட்களை வாங்க 12 சதவீதம் ஜி.எஸ்.டி., மட்டுமே கொடுக்கின்றனர். இதனால் எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. அத்துடன் மின்கட்டணமும் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இடத்திற்கான வாடகையும் உயர்ந்துள்ளது. ரூ.ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூ.5 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் இத்தொழிலை செய்ய யாரும் முன்வருவதில்லை என்றார்.எவர்சில்வர் தொழிலாளர் சங்க செயலாளர் அழகர் கூறியதாவது: ஒப்பந்த அடிப்படையில் 850 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறோம். இவர்களிலும் பலருக்கு வேலை இல்லை. வேலை செய்வோருக்கு வாரக்கூலி கிடைப்பதில்லை. பொருட்கள் உற்பத்தியாகி வெளியேறினால் மட்டுமே கூலி கிடைக்கிறது. உற்பத்தியாளர்களை நம்பித்தான் நாங்கள் இருக்கிறோம். அவர்கள் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் எங்களாலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி