| ADDED : ஆக 17, 2024 02:02 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உலக நன்மை, திருமணமாகாத பெண்களுக்கு வரன், உயிரினங்களுக்கு சுபிட்சம், மழை பெய்து செழிக்க வேண்டி 1008 விளக்கு பூஜை நடந்தது.கோயில் சார்பில் திருவாட்சி மண்டபத்தில் மூன்று அடி வெள்ளி விளக்கு, கம்பத்தடி மண்டபம், உற்ஸவர் சன்னதி, மடப்பள்ளி மண்டபம், ஆஸ்தான மண்டபங்களில் 3 அடி பித்தளை விளக்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டன.திருவாட்சி மண்டபத்தில் அலங்கரித்து வைத்திருந்த பிரதான விளக்கில் கோயில் சிவாச்சாரியார்கள் தீபம் ஏற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து கோயில் அனைத்து மண்டபங்களிலும் இருந்த பெண் பக்தர்கள் விளக்குகளில் தீபம் ஏற்றி பூஜை செய்தனர். தீபாராதனைக்கு பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.