உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காதல் பிரச்னையில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

காதல் பிரச்னையில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே ஆதனுார் சஞ்சீவ்தேவன் 20, ஒரு பெண்ணை காதலிக்கிறார். அப்பெண்ணிற்கு எர்ரம்பட்டி திரவியம் மகன் ஜெயப்பிரகாஷ் 24, தொந்தரவு கொடுத்துள்ளார். சஞ்சீவ் தேவன் சில மாதங்களுக்கு முன் ஜெயபிரகாஷை இப்பிரச்னையில் தாக்கியுள்ளார்.நேற்று முன்தினம் கேட்டுக்கடை பஸ் ஸ்டாப்பில் நின்ற சஞ்சீவ்தேவனை, ஜெயபிரகாஷ் மற்றும் 17 வயது சிறுவன் கத்தியுடன் விரட்டினர். இதனால் அருகில் நின்றவர்கள் பீதி அடைந்தனர். டீக்கடைக்குள் புகுந்த சஞ்சீவ்தேவனை குத்த முயன்றபோது அவர் தடுத்ததில் லேசான காயமடைந்தார். கொலை முயற்சி வழக்கில் ஜெயபிரகாஷ்,17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ