வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Change the departure time from Madurai to 6.30am, which will facilitate passengers from far off places.
மதுரை: மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்கள் நாளை (ஆக.31) முதல் இயக்கப்படவுள்ளது. ரயில்களின் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் (20671) அதிகாலை 5:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 5:59க்கு திண்டுக்கல் சென்றடையும். அங்கிருந்து காலை 6:01க்கு புறப்பட்டு 6:50க்கு திருச்சி சென்றடையும். அங்கிருந்து 6:55க்கு புறப்பட்டு 8:08க்கு கரூர், 8:32க்கு நாமக்கல், 9:15க்கு சேலம், மதியம் 12:50 மணிக்கு பெங்களூரு கிருஷ்ணராஜபுரம், 1:00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 45 நிமிடம்.மறுமார்க்கத்தில் மதியம் 1:30க்கு பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணராஜபுரத்திற்கு 1:55, மாலை 4:50 க்கு சேலம், 5:38 க்கு நாமக்கல், 5:58 க்கு கரூர், இரவு 7:20 மணிக்கு திருச்சி, 9:08க்கு திண்டுக்கல், 9:45 மணிக்கு மதுரை வந்து சேரும். மொத்த பயண நேரம் 8 மணி 15 நிமிடம்.8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் செவ்வாய் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஓடும். நாகர்கோவில் ரயில்
சென்னை - நாகர்கோவில் (20627) வந்தே பாரத் ரயில் அதிகாலை 5:00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு 5:23 க்கு தாம்பரம், 6:52க்கு விழுப்புரம், 8:55க்கு திருச்சி, 9:53க்கு திண்டுக்கல், 10:38க்கு மதுரை வந்து சேரும். இங்கிருந்து 10:40க்கு புறப்பட்டு 11:35க்கு கோவில்பட்டி, மதியம் 12:30க்கு திருநெல்வேலி, 1:50க்கு நாகர்கோவில் சென்றடையும்.மறுமார்க்கத்தில் மதியம் 2:20க்கு புறப்பட்டு மாலை 3:18க்கு திருநெல்வேலி, 3:58க்கு கோவில்பட்டி, 5:03க்கு மதுரைக்கு, 5:48க்கு திண்டுக்கல், 6:45க்கு திருச்சி, 8:53க்கு விழுப்புரம், 10:28க்கு தாம்பரம், 11:00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் புதன் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஓடும். இந்த இரண்டு ரயில்களுக்கும் கட்டண விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.
மதுரைக்கும் பெங்களூருக்கும் இடையே வர்த்தக, ஆன்மிக தொடர்பு அதிகம். மேலும் பெங்களூரு ஐ.டி., நிறுவனங்களில் மதுரையை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிகின்றனர். என்றாலும் மதுரையில் இருந்து புறப்பட்டு பெங்களூருக்கு செல்லும் ரயில்கள் ஏதும் இதுவரை இல்லை.மதுரை பயணி கள் பெங்களூரு செல்ல துாத்துக்குடி - -மைசூரு, நாகர்கோவில்-- பெங்களூரு ரயில்களை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த நிலையில் முதன்முதலாக மதுரை- - பெங்களூரு வந்தே பாரத் ரயில் விடப்படுகிறது. இது திண்டுக்கல்லில் இருந்து நேரடியாக கரூர் செல்லாமல் திருச்சி வழி செல்வதால் பயண நேரமும் கட்டணமும் அதிகரிக்கிறது. எனவே இதை திண்டுக்கல்-லில் இருந்து கரூருக்கு நேரடியாக இயக்கினால் மதுரை மக்களுக்கு மேலும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.
Change the departure time from Madurai to 6.30am, which will facilitate passengers from far off places.