உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உசிலம்பட்டிக்கு தினமும் 20 டன் மல்லிகை வரத்து

உசிலம்பட்டிக்கு தினமும் 20 டன் மல்லிகை வரத்து

உசிலம்பட்டி : உசிலம்பட்டி பூ மார்க்கெட்டிற்கு தினமும் 20 டன் மல்லிகை வருகிறது. கிலோ ரூ.200க்கு வாசனை திரவிய தயாரிப்பு நிறுவனங்கள் வாங்கிச் செல்கின்றன.உசிலம்பட்டி, எழுமலை பகுதி கிராமங்களில் பல நுாறு ஏக்கர்களில் மல்லிகை பயிரிட்டுள்ளனர். தற்போது மல்லிகை பூப்பதற்கு ஏற்ற காலநிலை உள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் சராசரியாக 10 டன்கள் வந்த நிலையில், தற்போது நுாறு சதவீதம் வரத்து அதிகரித்துள்ளது. காலையில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்தது போக தேங்கும் பூக்களை வாசனைத் திரவிய தொழிற்சாலைக்கு வாங்கிச் செல்கின்றனர். கடந்த மாதம் வரை கிலோ ரூ. 250க்கு விற்ற நிலையில், சிலநாட்களாக ரூ.200க்கு விற்கின்றனர். பூக்கள் அதிகரித்துள்ளதால் பறிக்கும் கூலியும் அதிகரித்துள்ளது. பூக்கள் வரத்து அதிகரிக்கும் காலத்தில் விலை வீழ்ச்சியடையாமல் வேளாண்மை விற்பனைத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ