உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 280 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

280 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

மதுரை : உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.பி., விஜயகார்த்திக்ராஜா உத்தரவுபடி, டி.எஸ்.பி., ஜெகதீசன், இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ., முத்துராஜா தலைமையிலான போலீசார் மதுரை புட்டுத்தோப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த ஆட்டோவில் 280 கிலோ ரேஷன் அரிசியை வெளிமாவட்டங்களுக்கு கடத்த எடுத்துச்செல்லப்பட்டது தெரிந்தது. உரிமையாளர் அண்ணாநகர் ராஜேஷ்குமார் 46, காந்தி நகர் டிரைவர் கார்த்திக் 26, ஆகியோரை கைது செய்தனர். உணவுப்பொருள் கடத்தல், பதுக்கல் குறித்து மக்கள் இலவச எண்ணான 1800 599 5950ல் தகவல் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ