உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜி.எஸ்.டி.,யில் ரூ.32.68 கோடி மோசடி; கோவை ந பருக்கு சிறை

ஜி.எஸ்.டி.,யில் ரூ.32.68 கோடி மோசடி; கோவை ந பருக்கு சிறை

கோவை: மத்திய அரசுக்கு செலுத்திய ஜி.எஸ்.டி.,யில், போலி நிறுவனங்கள் பெயரில் பில்கள் சமர்ப்பித்து, ரூ.32.68 கோடியை மோசடியாக திரும்பப் பெற்றதை, ஜி.எஸ்.டி., புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்து, ஒருவரை சிறையில் அடைத்தனர்.மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி., செலுத்தும் நிறுவனங்கள், அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து, குறிப்பிட்ட சதவீதம் வரித்தொகையை திரும்ப பெறலாம். இச்சலுகையை சிலர் தவறாக பயன்படுத்தி, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, உள்ளீட்டு வரியை திரும்ப பெறுகின்றனர். இதை ஜி.எஸ்.டி., புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கின்றனர்.கோவையில் பழைய இரும்பு பொருட்களை, விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருபவரின் வீடு மற்றும் குடோன்களில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி துறை புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், சமீபத்தில் சோதனை செய்தனர்.அப்போது, 17 நபர்களின் பான் கார்டு, 20 நபர்களின் ஆதார் கார்டு, 21 வங்கி கணக்குகளின் பாஸ்புக், 41 வங்கி கணக்குகளின் செக் புக், 16 நிறுவனங்களின் முத்திரை, ஓடிபி பெறுவதற்கு பயன்படுத்திய போன்கள், ஏராளமான சிம்கார்டுகள், ஏராளமான டெபிட் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.ரூ.65.42 கோடிக்கு மோசடியாக ஆவணங்கள் சமர்ப்பித்து, ரூ.37.20 கோடிக்கு உள்ளீட்டு வரித்தொகையை திரும்ப பெற முயற்சித்திருக்கின்றனர்.கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்தபோது, இல்லாத நான்கு நிறுவனங்கள் பெயரில் மோசடியாக ஆவணங்கள் சமர்ப்பித்து, உள்ளீட்டு வரியில் ரூ.32.68 கோடி திரும்ப பெற்று, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது.அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய, சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.உள்ளீட்டு வரி திரும்ப பெற்றது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடப்பதாக, ஜி.எஸ்.டி., புலனாய்வு பிரிவு கூடுதல் இயக்குனர் ஹரீஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி