உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் "தொடுவானம் திட்டம்: கலெக்டர் துவக்கினார்

மதுரையில் "தொடுவானம் திட்டம்: கலெக்டர் துவக்கினார்

மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முதற்கட்டமாக 25 ஊராட்சிகளுக்கான தொடுவானம் பயிலரங்கத்தை கலெக்டர் சகாயம் துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் 25 லட்சத்து 62 ஆயிரத்து 279 பேர் உள்ளனர். இதில் ஊரக பகுதியில் மட்டும் 11 லட்சத்து 29 ஆயிரத்து 28 பேர் உள்ளனர். ஊராட்சி ஒன்றியங்கள் 13, கிராம ஊராட்சிகள் 431, பேரூராட்சிகள் 10, நகராட்சிகள் 3, மூன்றாம் நிலை நகராட்சிகள் 3 உள்ளன. தொடுவானம் என்ற இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் புதிய முயற்சி. இது முதற்கட்டமாக 25 கிராமங்களில் செயல்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும் 5 பேருக்கு வழங்கப்படுகிறது. தொலை தூர கிராமங்களில் இருப்போர் கலெக்டரை சந்திக்க வேலை இழப்பு, பணச் செலவு, காலவிரயம் போன்றவற்றை சந்திக்கின்றனர்.

இதனை தவிர்க்கும் இத்திட்டம் விரைவில் பிறமாவட்டங்களிலும் வரும். அரசு திட்டங்கள், அதற்கான வழிமுறைகள், எந்த அதிகாரியை அணுகுவது, எத்தனை நாளில் பயன்பெறலாம் என்பதை இதன் மூலம் எளிதில் அறியலாம். சமத்துவ நிலையை உருவாக்கும். கலெக்டர் உட்பட அதிகாரிகளுக்கு ஊராட்சிகளில் இருந்து இணையதளம் மூலம் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம், என்றார். மின்ஆளுமை, தமிழ் விக்கிபீடியா பயன்கள் குறித்து லதானந்த், சுப்ரமணியன் பேசினர். முன்னதாக டி.ஆர்.ஓ., முருகேஷ் வரவேற்றார். துணை கலெக்டர் ராஜாராம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயசிங்ஞானதுரை, மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் பங்கேற்றனர். தேசிய தகவல் அலுவலர் மைக்கேல்ராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ