உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வியாபாரியிடம் வழிப்பறி மேலும் 4 பேர் கைது

வியாபாரியிடம் வழிப்பறி மேலும் 4 பேர் கைது

வாடிப்பட்டி : திருச்சி வடக்கு காட்டூர் நிர்மல் கண்ணன் 31, அடகு நகைகளை வாங்கி வியாபாரம் செய்கிறார்.மே 20 நண்பர்களுடன் காரில் 300 பவுன் அடகு நகைகளை வாங்க திண்டுக்கல் வந்தார்.வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டி ரோட்டில் வைத்து ரூ.19 லட்சத்து 50 ஆயிரத்தை சிலர் பறித்து சென்றனர்.வாடிப்பட்டி போலீசார் மே 28ல் பொட்டுலுபட்டி தினேஷ்குமார் 23, ராமராஜபுரம் ஆனந்த் 25, அர்ஜுனனை 25, கைது செய்து ரூ.59 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய மட்டப்பாறை வினித் 27, நவீன்குமார் 23, ராமராஜபுரம் வினோத் 34, கரட்டூர் சுரேஷ் 29, ஆகியோரையும் போலீசார் கைது செய்து ரூ.3500 பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !