உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 450 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை

மதுரையில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 450 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை

அலங்காநல்லுார்: மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் பாசிங்காபுரத்தில் இன்ஸ்பெக்டர் ஷர்மிளாவின் 42, வீட்டின் கதவை உடைத்து 450 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள விளாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஷர்மிளா. இவரது வீடு மதுரை அலங்காநல்லுார் அருகே பாசிங்காபுரம் மீனாட்சி நகரில் உள்ளது. கணவர் உதய்கண்ணன் வெளிநாட்டில் பொறியாளராக உள்ளார். மகன் ஆகாஷ் கண்ணன் சென்னையில் பணிபுரிகிறார்.வீட்டில் ஷர்மிளாவின் தாய் சண்முகவள்ளி 65, பேத்தி வசிக்கின்றனர். சில வாரங்களாக ஆகாஷ் மேற்பார்வையில் வீட்டில் அலமாரி உள்ளிட்ட மர டிசைனிங் வேலை நடக்கிறது. இவர்களது சொந்த ஊரான பாலமேடு அருகே சத்திர வெள்ளாளபட்டிக்கு மே 8ல் இன்ஸ்பெக்டரின் மகன், மகள், தாய் சென்றனர்.நேற்று முன்தினம் இரவு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு மற்றும் பீரோவை உடைத்து உள்ளே இருந்த 450 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. எஸ்.பி., அரவிந்தன் ஆய்வு செய்தார். வீட்டின் கண்காணிப்பு கேமராக்கள் முறையாக இயங்காததால் திருடர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் மர டிசைனிங் வேலை செய்தவர்களுக்கு தொடர்பு உள்ளதா என அலங்காநல்லுார் இன்ஸ்பெக்டர் மன்னவன் தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rajamani Shanmugavelu
மே 12, 2024 10:49

ஒரு இன்ஸ்பெக்ட்டர் வீட்டுலேயே இவ்வளவுன்னா மேல் அதிகாரிகள் வீட்டுல எவ்வளவு இறுக்கும்வருமான வரி அதிகாரிகளுக்கு தெரியுமா


Joe Rathinam
மே 12, 2024 09:55

If the police inspector Mrs Sharmila can reveal souce of her income to the income tax department?


Jysenn
மே 12, 2024 07:41

This honest police woman deserves an Anna Pathakkam for promoting the concept of How to Make Wealth with Soft Skills Her methodology for creating wealth will definitely encourage the aspiring youthShe should be deputed by the department to give inspiring speeches in schools and colleges so that the students will understand the methods of making easy money She should be promoted to DSP soon and then SP Congratulations in advance


Mani . V
மே 12, 2024 07:02

எது ஒரு பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் இவ்வளவு நகைகளா? எப்படி வந்திருக்கும்? நமக்கெதுக்குப் பொல்லாப்பு? இதைக் கேட்டால் கைது செய்து தொலைவார்கள்


D.Ambujavalli
மே 12, 2024 06:08

போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்து, நகைகளை லாக்கரில், அதிகப்படி பணத்தை வங்கியிலும் வைக்க வேண்டுமென்று தெரியாதா ? ஒருவேளை ‘வாங்கிய’ பொருள்களை காபந்து செய்ய வீட்டை விட்டால் வழியில்லை என்பதால் இருக்குமோ ? சக ஊழியர்களுக்கே கூட கடுப்பாகி நடத்தியிருக்கலாம் போலீசுக்கே தன பொருளை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை என்றால் இவர்கள் என்ன பாதுகாப்பைக் கொடுப்பார்கள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை